பின்னந்த தலையில் ஓங்கி ஒரு அடி..! சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்! பதற வைக்கும் காரணம்!

குரங்கு தொப்பி அணிந்த இரண்டு மர்மநபர்கள் பெண்ணை தாக்கிவிட்டு செயினை பறித்துக்கொண்டு தப்பிய சிசிடிவி காட்சிகள் பெங்களூருவில் பதிவாகி உள்ளது.


கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் பகுதியில் சாலையோரமாக ஒரு பெண் நடந்துகொண்டு சென்றிருந்தார். அப்போது குரங்கு தொப்பி அணிந்த இரண்டு மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அவர்கள் பெண்ணை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கையில் இருந்த ஆயுதத்தால் பெண்ணை தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.  

இதையடுத்து அவரின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. அதைவைத்து, வழிப்பறி நபர்களை கே.ஆர்.புரம் போலீஸார் தேடி வருகின்றனர்.

இப்போதெல்லாம் சிசிடிவி எல்லா இடத்திலும் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் கொள்ளையர்கள் தங்கள் அடையாளங்களை மறைக்க தலைக்கவசம் அணிகின்றனர். அல்லது மங்க்கி கேப் போட்டுக்கொள்கின்றனர்.