ஒன்னுக்கு போவியாடா? 3 வயது குழந்தையை கத்தியால் குத்திய ஆயா! அங்கன்வாடி பயங்கரம்! அதிர்ச்சி காரணம்!

பெங்களூரு: பால்வாடியில் சிறுநீர் கழித்த குற்றத்திற்காக சிறுவனை கத்தியால் குத்திய பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.


கர்நாடகா மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள கெரிமாக்கி கிராமத்தில் பால்வாடி ஒன்று செயல்படுகிறது. இந்த பால்வாடியை நிர்வகிக்கும் பணியை மாலா என்ற பெண் செய்து வருகிறார். இந்நிலையில் இங்கு சேர்க்கப்பட்ட 3 வயது சிறுவன் அமித், பால்வாடியின் உள்ளேயே சிறுநீர் கழித்திருக்கிறான்.

இதனை பார்த்ததும் கடும் ஆத்திரமடைந்த மாலா, ஏதுமறியாத சிறுவன் என்றும் பாராமல் கையில் இருந்த கத்தியால் அவனை தாக்கியுள்ளார். இதில் சிறுவனுக்கு தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டு, உடனடியாக, சிக்மகளூரு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பிறகு, சுற்றுப்புற பொதுமக்களின் புகாரை தொடர்ந்து, போலீசார் மாலாவை கைது செய்தனர்.  

பால்வாடியில் வளர்க்கப்படும் சிறு குழந்தைகள் சிறுநீர் கழிப்பதும், அவசரத்தில் உடையிலேயே மலம் கழிப்பதும் உலகம் எங்கும் நடைபெறும் செயல்தான். ஆனால், இதனை மிகப்பெரிய குற்றமாக மாற்றி சிறுவனை கத்தியால் தாக்கும் அளவிற்கு கொடூரமாகச் செயல்பட்ட மாலா, இன்றைய நவீன இயந்திர உலகத்தின் பொறுப்பற்ற மனப்பான்மையை உணர்த்தக்கூடியவராக உள்ளார்.