நான் தான் உங்க சின்ன வீடு! அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கிக் ஏற்றிய கவர்ச்சி நடிகை!

கரூரில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் கவர்ச்சி நடிகை ஒருவர் பங்கேற்று நான் தான் உங்க சின்ன வீடு என்று கூற அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.


நாயகன் படத்தில் வரும் நான் சிரித்தால் தீபாவளி எனும் பாடல் பலருக்கு தெரிந்த ஒன்று. இந்தப் பாடலில் ஆடியவர் தான் பபிதா. பாக்கியராஜின் சின்னவீடு திரைப்படத்திலும் இவர் பாக்கியராஜ் சின்ன வீடாக நடித்திருப்பார்.

அந்த வகையில் பபித்தாவை சின்னவீடு பபிதா என்றும் திரையுலகினர் அழைப்பார். தற்போது அதிமுக வில் இருக்கும் பபிதா கரூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். கவர்ச்சி நடிகை ஒருவர் வருவதாக விளம்பரம் செய்யப்பட்டதால் ஏராளமானோர் அங்கு கூடியிருந்தனர்.

பபிதா அங்கு வந்து பேச ஆரம்பித்ததும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கவர்ச்சி நடிகை என்று கூறினார்கள் ஆனால் ஒரு பாட்டி வந்து பேசிக் கொண்டிருக்கிறார் என்று பலரும் முணுமுணுத்தனர். இதனைப் புரிந்துகொண்ட பபிதா என்னை யார் என்று தெரியவில்லையா என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டார். பெரும்பாலானவர்கள் தெரியவில்லை என்று தலையசைத்தனர்.

இதனையடுத்து நான் தான் உங்க சின்ன வீடு என்று பபிதா கூற கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர். தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் நான் உங்க சின்ன வீடு இல்லை பாக்கியராஜின் சின்னவீடு படத்தில் நடித்த சின்னவீடு பபிதா என்று கூறி சமாளித்தார்.