அதிகாரிகள் அலட்சியம்! திறந்திருந்த சாக்கடை! தடுமாறிய சிறுமி! நொடியில் நிகழ்ந்த அதிசயம்! இளைஞருக்கு குவியும் பாராட்டு!

ராஜஸ்தான் மாநிலத்தில் சாலையின் நடுவே மூடப்படாமல் இருந்த சாக்கடைக் குழியில் விழுந்த சிறுமியை காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பல இடங்களில் சாலைகள் முறையாக அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுவாகவே போக்குவரத்து பாதிப்பு இருக்கும். சாக்கடைக் கால்வாய்களுக்குள், இறங்கி தூர்வாறும் பயிற்சியும் அனுபவமும் பெற்ற துப்புரவு ஊழியர்களுக்கே பல நேரங்களில் அசம்பாவிதங்கள் நிகழும் நிலையில், சிறுவர்கள் விழுந்தால் சொல்லவே வேண்டாம். காப்பாற்றுவது மிக சிரமம். 

இந்நிலையில் ஜோத்பூர் பகுதியில், பொறுப்பின்றி சாக்கடைக் கால்வாயை திறந்து வைத்திருந்ததால், அந்த வழியே வந்த சிறுமி, எதிர்பாராத வகையில், கால்வாய்க்குள் விழுந்து விடுகிறார். எனினும் எப்படியாவது மேலே வந்து விடும் முயற்சி தோல்வியிலேயே முடிந்துவிடுகிறது.

இதைப் பார்த்த அங்கிருந்த இளைஞர் ஒருவர் பதறி அடித்துக் கொண்டு வந்து தன் உயிரையும் பொருட்படுத்தாத அந்த சிறுமியை காப்பாற்றுகிறார். பின்னர் சிறுமி மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளிக்கப்பட்டது.

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. சிறுமியை காப்பாற்றிய அந்த இளைஞருக்கு பெற்றோர், கிராம மக்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் சாக்கடைக் கால்வாய் கவனிப்பாரற்று கிடந்துள்ள சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பராமரிப்பு பணிக்காக சாக்கடை திறந்து வைத்திருந்ததாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் அந்த வழியே செல்ல முடியாதவாறு தடுப்பு அமைத்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது என அந்த கிராம மக்கள் தெரிவித்தனர்.