ஹாஸ்பிடலில் அகால மரணம் அடைந்த மகள்! பிரேதத்தை வாங்காமல் தப்பி ஓடிய பெற்றோர்! அதிர வைக்கும் காரணம்!

குழந்தையின் உடலை வாங்க மறுத்து ரவுடி ஓட்டம். ரவுடித் தம்பதியை தேடிவருகிறது போலீஸ்.


கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் மருத்துவமனையில் இறந்த குழந்தையின் உடலை வாங்காமல் தப்பி ஓடி தம்பதியை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர். கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ளது ஹுப்ளி நகரம். ஹுப்ளி நகரம் அருகே உள்ள கோகுலா என்ற குக்கிராமத்தில் வசித்து வருபவர்கள் தாதாபீர் சேக் மற்றும் பூஜா தாகூர் என்கிற தம்பதியர்.

இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் குழந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே அங்கிருந்த கிம்ஸ் எனும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நோயின் தாக்கம் தீவிரம் காரணமாக அந்த குழந்தை 2 நாட்களிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இன்னர் குழந்தையின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் உடலை கொண்டு செல்லுமாறு பெற்றோருக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி அளித்தது. ஆனால் குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ளாமல் அந்த தம்பதி மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் தந்த புகாரில் வந்த போலீசார் குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்த வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர்.

அங்கு அந்த தம்பதி வீட்டையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் குழந்தையின் தந்தை எனக் கூறப்படும் தாதாபீர் சேக் ஒரு ரவுடி என்றும் அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதை கண்டுபிடித்தனர்.

மேலும் பெற்றக் குழந்தையின் உடலை வாங்க மறுக்கும் இந்த தம்பதி உண்மையிலேயே அந்தக் குழந்தையின் பெற்றோரா அல்லது கடத்திவந்த குழந்தையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க குழந்தையின் பெற்றோர் எனக் கூறப்படும் அந்த தம்பதி மிகவும் ஏழ்மை நிலைமையில் இருந்ததாகவும் குழந்தைக்கு இறுதிச் சடங்கு செய்யக் கூட காசு இல்லாத வறுமையில்தான் ஓடியிருக்கலாம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.

கடத்தி வந்த குழந்தையோ பெற்ற குழந்தையோ இறுதிச் சடங்கு செய்ய மனமில்லாமல் போன அந்த தம்பதிக்கு சட்டம் தண்டனை கொடுத்தால் என்ன கொடுக்காவிடில் என்ன மனசாட்சி ஒருநாள் தண்டிக்கும்.

குழந்தையின் பாசத்துக்கு உலகையே விலை கொடுக்கலாம் என பட்டிமன்றத்தில் பேசுகிறார்கள். குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என பாடல் எழுதுகிறார்கள். குழந்தையின் புன்சிரிப்பு கல் நெஞ்சையும் கரைய வைக்கும் என கட்டுரை எழுதுகிறார்கள். 

அனாதை சடலங்கள் எனக் கூறப்படும் உடல்களை கூற சமூக ஆர்வலர்கள் சாதி, பேதமின்றி மரியாதையுடன் அடக்கம் செய்து உதவி செய்கிறார்கள். ஆனால் தன்னால் வளர்த்த குழந்தை இறந்தவுடன் அடக்கம் செய்யாமல் ஓடிப் போகும் பெற்றோர் பற்றியும் கொஞ்சம் இனி பேசலாம்.