தர்மபுரியில் இரவில் உணவு உண்டு நன்கு உறங்கிக் கொண்டிருந்த குழந்தை பகலில் திடீரென மரணமுற்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரவில் உணவு கொடுத்து தூங்க வைக்கப்பட்ட குழந்தை! காலையில் சடலமாக கிடந்த திடுக் சம்பவம்! தருமபுரி பரபரப்பு!

தர்மபுரி மாவட்டம் பொன்னகரம் பகுதியை அடுத்த ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு வயதில் மித்ரா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் மித்ராவுக்கு கடந்த சில நாள்களாகவே காய்ச்சல் தீவிரமாக இருந்து வந்துள்ளது.
இதையடுத்து அவர் ஓர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின் அளிக்கப்பட்ட சிகிச்சையினால் உடல் சற்று தேறிய அவர் கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அன்று இரவு அவருக்கு உணவு அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளும் அளிக்கப்பட்டன. பின் நன்கு உறங்கிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை பகலில் மூச்சு பேச்சின்றி கிடந்தது. இதனால் பதட்டமடைந்த அவரது பெற்றோர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு ஓடினர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அதிகப்படியான காய்ச்சல் இரவில் வந்ததுதான் குழந்தை இறந்ததற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளனர். இரவில் உணவு உண்டு நன்கு உறங்கிய குழந்தை பகலில் திடீரென மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.