விமானத்தில் நடுவானில் கழிப்பறை சென்ற கர்ப்பிணி பெண்! கையில் குழந்தையோடு வந்த அதிசயம்!

கத்தார் நாட்டில் விமானத்தில் பயணித்துக் கொண்டிருக்கும்போது பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் விமானத்தில் உள்ள மருத்துவர்கள் கழிப்பறையில் வைத்து பிரசவம் பார்த்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அவர்களது புகைப்படமானது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. கத்தார் நாட்டின் மிடில் ஈஸ்ட் ஏர்லைன்ஸ் விமான சேவை மூலம் நிறை மாத கர்ப்பிணி பெண் ஒருவர் டோகா பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது அப்பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்பன் பிரசவ வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை விமானத்தில் உள்ள மருத்துவர்கள் மூலம் கழிவறைக்கு அழைத்து சென்று அங்கு அவளுக்குப் பிரசவம் பார்க்கப்பட்டது. இதையடுத்து அப்பெண்ணிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் விமானத்தில் பயிற்சி பெற்ற மருத்துவ குழுவினர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவம் முடிந்து அவர்கள் தாயும் சேயும் நலம் என விமான ஓட்டுனரிடம் தெரிவித்துள்ளனர் இதையடுத்து அவர்களின் உதவிக்காக விமானம் திடீரென குவைத்தில் தரையிறக்கப்பட்ட அங்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மேற்படி சிகிச்சை அழிக்கப்பட்டு வருகிறது. பிரசவம் முடிந்து குழந்தையை ஒரு சால்வையில் வைத்து வெளியே எடுத்து வந்துள்ளனர் அதை புகைப்படம் எடுத்த பலர் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர்.