இஸ்லாமியர்களை போட்டுத் தாக்கும் பாபா ராம்தேவ்! அடுத்து ராமர் ஆட்சியா?

மோடி ஆட்சிக்கு வந்ததும் மீண்டும் இந்து சாமியார்கள் ஆட்டம் ஆரம்பமாகும் என்பதற்கு உதாரணமாக இப்போதே ராம்தேவ் பேச ஆரம்பித்துவிட்டார். தேர்தலுக்குப் பிறகான அவரது பேச்சு நேரடியாக இஸ்லாமியர்களைத் தாக்குவதாக அமைந்திருக்கிறது.


அதாவது இந்தியாவின் மக்கள் தொகையைக் குறைக்க, இரண்டு குழந்தைகளுக்கு மேல் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்றும், அப்படி குழந்தை பெற்றுக்கொண்டால், மூன்றாவது குழந்தையின் ஓட்டுரிமை ரத்து செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் பேசியிருக்கிறார்.

இப்போது இந்தியாவில் முஸ்லீம் இன மக்கள் மட்டுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களாக இருக்கிறார்கள். இந்துக்கள் வீடுகளில் இப்போது இரண்டு குழந்தைகளே அதிகம்தான். அதனால், நேரடியாக இஸ்லாமியர்களைத் தாக்குவதற்கு இந்த கருத்தை கையில் எடுத்திருக்கிறார் ராம்தேவ்.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்திலேயே முஸ்லீம்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்து, அதற்காகவே ராம்தேவை பேச வைத்திருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதை வைத்துப் பார்க்கும்போது, அடுத்து அயோத்தியில் ராமர் கோயிலை கட்டாமல் விடவே மாட்டார்கள் என்பதும் தெரிகிறது.

நடக்கப்போவது மோடியின் ஆட்சியா அல்லது ராமரின் ஆட்சியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.