ஸ்டாலினை சீண்டும் அழகிரி! ரஜினிக்கு ஆதரவாக வெற்றிடக் கருத்து!

அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்று ரஜினிகாந்த் சொன்னதையடுத்து, எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் மாற்றி மாற்றி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


அவர்கள் மட்டுமின்றி அ.தி.மு.க. அமைச்சர்களும், தி.மு.க. முக்கியப் பிரமுகர்களும் ரஜினிக்கு எதிராக பல்வேறு அறிக்கைகள் விட்டு வருகின்றனர். வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் என்று தி.மு.க.வும், ஆட்சியை எடப்பாடி இத்தனை சிறப்பாக நடத்திவருவதைப் பார்த்தாலே வெற்றிடம் இல்லை என்பது தெரியவில்லையா என்று அ.தி.மு.க.வும் பேசிவருகிறது.

இந்தப் பஞ்சாயத்தே முடியாத நிலையில், ஸ்டாலினுக்கு எதிராக வெற்றிடம் கருத்தை மீண்டும் அழுத்திப் பேசியிருக்கிறார் அழகிரி. ஏற்கெனவே ஹெச்.ராஜா வீட்டுக்கு அவர் போய்வந்ததே விவகாரமாக இருக்கும் நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ரஜினி சொன்னது உண்மைதான்.

தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது’ என்று தெளிவாக போட்டு உடைத்துவிட்டுப் போனார். இதற்கு எப்படி பதிலடி கொடுப்பது என்று தெரியாமல் இரண்டு கட்சியினரும் தடுமாறி வருகின்றனர்.