ஓடிப்போன அழகிரி! அப்செட்டில் மதுரை ஆதரவாளர்கள்! ஸ்டாலின் ஹேப்பி அண்ணாச்சி!

ஒன்றுமில்லாத அழகிரிக்கு ஓவராக பில்டப் கொடுத்து, அவரது ஆதரவாளர்கள் ஏற்றிவிட்டனர். தன்னிடம் ஒன்றுமே இல்லை என்பதை சென்னை பேரணி காட்டிக் கொடுத்துவிட்டது என்பதால் அமைதி காத்தார் அழகிரி.


இந்த நிலையில் கனிமொழியை எதிர்த்து பொது வேட்பாளராக களம் இறங்க முடியுமா என்று பா.ஜ.க. சார்பில் கேட்கப்பட்டது. தகவல் அறிந்து கனிமொழி டென்ஷனாகவே, அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

இதையடுத்து ரஜினி கட்சி ஆரம்பிப்பார், எப்படியும் போய் நல்ல பதவி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தார். அவரும் கட்சி அலுவலகத்தையே பூட்டிப் போட்டு ஓடிவிட்டார். ஆனாலும் அவ்வப்போது அழகிரி என்ன செய்யப் போகிறார் தெரியுமா என்று அவரது ஆதரவாளர்கள் கிளப்பிவிட்டுக்கொண்டே இருந்தனர்.

அந்த வகையில், இந்தத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அழகிரி அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிடுவார், தமிழகமே மிரளும் என்றெல்லாம் சொல்லிவந்தார்கள். எல்லோரும் என்னமோ ஏதோவென காத்திருக்க, நெருங்கிய கட்சிக்காரர்களிடம்கூட சொல்லாமல் ஊரைவிட்டு கிளம்பி சென்னைக்கு வந்துவிட்டாராம் அழகிரி.

மதுரையில் இருந்தா எதையாச்சும் சொல்லி ஏத்துவிட்டு பேச வைச்சிடுவாங்க, தேர்தல் வரைக்கும் கப்சிப் என்று இருக்கப் போகிறேன் என்று மகன் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.

தகவல் அறிந்து அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தாலும், இன்னமும் பழைய கெத்து குறையாமல், அண்ணன் சென்னையில் போய் கலக்கப் போறார் என்று சொல்லி வருகிறார்களாம். பாவம்தான்.