பச்சை நிறத்துக்கு மாறிய அண்டார்டிகா பிரதேசம்..! இதுதான் அரோரா நிகழ்வு!

அண்டார்டிகா பகுதி பச்சை நிறத்தில் மிளிர்ந்த அதிசயத்தை சீன ஆராய்ச்சி மையம் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இது பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.


வெள்ளை நிறத்தில் இருக்கும் மேகங்கள் திடீரென பச்சை நிறத்தில் ஒளிர்ந்து, அண்டார்டிகாவில் படர்ந்துள்ள பனிமீது பட்டு மீண்டும் பச்சை நிறமாக எதிரொளித்த கண்கொள்ளா காட்சியை அண்டார்டிகாவில் உள்ள சீனா நாட்டின் ஜாங்ஷான் ஆராய்ச்சி மையம் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது.

இதற்கு காரணம் அரோரா என அந்த ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டிருந்தது. அரோர நிகழ்வு அண்டார்டிகா மற்றும் ஆர்ட்டிக் உயர் அட்சரேகை பகுதிகளில் அவ்வப்போது தோன்றக் கூடிய ஒன்றாகும். 

சூரியனின் வெளிப் பகுதியில் வெப்ப துகள்கள் உயர் வெப்பத்துடன் பூமியின் சீரான காந்தப் புலத்தில் மாற்றம் ஏற்படுத்தும். இந்த மாற்றத்தினால் பூமி மீது படும் சூரிய வெளிச்சத்தின் பாதையில் மாற்றங்கள் உண்டாகும். இந்த மாற்றத்தினால் அரோரா நிகழ்வு ஏற்பட்டு இதுபோன்ற வண்ண நிறங்களில் ஒளிர்வு காணப்படும்.