கண் பார்வையை கூர்மையாக்கும் அவரைக்காய்

பலருக்கும் பிடிக்காத ஒன்றாகத்தான் அவரைக்காய் இருக்கிறது. ஆனால் இதில் பல அரிய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. பிஞ்சுக் காயாக வாங்கும்போதுதான் அதிக பயன் இருக்கும்.


·          சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்கள் அவரையில் நிரம்பியிருப்பதால் இளைத்த உடல் தேறும். உடலுக்கு பலம் தருவதுடன் மனதுக்கு அமைதி தரும்.

·         அவரைப் பிஞ்சுகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சூடு,, கண் பார்வை மங்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை.

·         அவரைக்காய் மலச்சிக்கலையும் வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.