10 நாட்கள் தாலியை மறைத்த 16 வயது சிறுமி! சென்னையில் அரங்கேறிய பகீர் கல்யாணம்!

சென்னையில் 16 வயது சிறுமியை காதல் ஆசை காட்டி பெரியபாளையம் கோயிலுக்கு அழைத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் கோபி அவருக்கு தாலி கட்டியுள்ளார்.


கோபிக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அதை மறைத்து  சிறுமிக்கு காதல் ஆசை காட்டி திருமணம் செய்துள்ளார்.எனவே என் மகளுக்கு நீதி கிடைக்க கோபி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் தாயார் காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

பின்னர் போலீசார் விசாரணையில் சிறுமி கூறியதாவது கடந்த 20.3.2019-ல் பெரியபாளையத்துக்குத் தன்னை கோபி அழைத்துச் சென்றதாகவும் அங்குள்ள கோயிலில் தனக்குத் தாலி கட்டியதாகவும் கூறினார்.இருவருக்கும் திருமணம் ஆன நிலையில்  சில நாட்கள் வீட்டிற்கு தெரியாமலேயே தாலியை மறைத்து வைத்துள்ளார்.

தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்று வந்துள்ள சிறுமி தாலியைப் பெற்றோருக்குத் தெரியாமல் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக மறைத்து வந்துள்ளார். திடீரென ஒருநாள் சிறுமியின் அம்மா தாலியைப் பார்த்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் தாலி குறித்து சிறுமியிடம் கேட்டபோதுதான் கோபி விவகாரம் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.

கோபி மீது சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர் கோபி  கைது செய்யப்பட்டுள்ளார் . சிறுமி தரப்பில் பேசியவர்கள் ஆட்டோ டிரைவரான கோபி, அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு வருவார். அப்போது சிறுமியிடம் கோபி பேசுவார். கோபி உறவினர் என்பதால் அதை யாரும் தவறாகக் கருதவில்லை.

ஆனால். சிறுமியிடம் கோபி வேறு எண்ணத்தில் பழகியது இப்போதுதான் தெரிகிறது. சிறுமியின் மனதை மாற்றிய கோபி வீட்டுக்குத் தெரியாமல் கழுத்தில் தாலி கட்டியுள்ளார். அதையும் சிறுமி வீட்டுக்குத் தெரியாமல் மறைத்துவிட்டார். கோபிக்குத் திருமணமாகிவிட்டது. சிறுமியின் எதிர்கால வாழ்க்கையை அவர் கேள்விகுறியாக்கிவிட்டார். என அச் சிறுமியின் பெற்றோர்கள் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.