நட்ட நடு ரோடு..! பலர் பார்க்க 53 வயது பெண் அதிகாரிக்கு கன்னத்தில் ஸ்ட்ராங்காக ஒன்று கொடுத்த இளைஞர்! அதிர்ச்சி காரணம்!

சேலம் மாவட்டத்தில் குடிபோதையில் அரசு அதிகாரியை வம்பிழுத்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு பரிதாபமாக சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.


100 மில்லி மதுபானம் குடித்துவிட்டாலே தன்னை ஹிட்லர் போல் சித்தரித்துக்கொள்ளும் குடிமகன்கள் போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்து வம்பில் மாட்டிக் கொள்கின்றனர். 

அதுபோல் சம்பவம்தான் சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நடைபெற்றுள்ளது.

கூனாண்டியூரில் பள்ளி மாணவர்களுடன் அரசு அதிகாரிகள் டெங்கு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்திக்கொண்டிருந்தனர். இந்த பேரணியை சேலம் ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் சுசீலா ராணி, மேச்சேரி வட்டார வளர்ச்சி அலுவலர் மாலினி, ஊராட்சி செயலர் விஜயகுமார் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று டெங்கு கொசுக்களை அழிக்கும் முறை குறித்து பொது மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தனர். 

பேரணியின்போது ஒரு சரக்கு வாகனம் ஒன்று குறுக்கிட்டது. அதில் இருந்து ஏற்கனவே சரக்கடித்துவிட்டு வந்த ஓட்டுநர் அரசு அதிகாரிகளை பார்த்து பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு நடத்த யாரிடம் அனுமதி பெற்றீர்கள் என வினவினார். மேலும் தான் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரி கட்டுவதால் பேரணி நடத்த என்னிடம் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். அவரது செல்போனை அரசு அதிகாரி ஒருவர் தட்டிவிட ஆத்திரம் அடைந்த பிரபாகரன் ஆபாசவார்த்தைகளால் திட்டி, சுசீலாராணியை கன்னத்தில் அறைந்தார். பின்னர் தன்னுடைய சரக்கு வாகனத்தை ஓட்டி அரசு அதிகாரிகள் மீது மோத முயன்றார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

பின்னர் சுசீலா ராணி தந்த புகாரில் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், தாக்குதல், வாகனத்தை கொண்டு ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என்பன உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபாகரனை கைது செய்தனர். அவரது சரக்கு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பிரபாகரன்.

குடிபோதையில் செய்த ரகளையில் அன்றாட வருமானத்தையும் இழந்து ஆட்டோவையும் இழந்து குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் சிறைக்கு சென்றுள்ளார் பிரபாகரன்.

அது சரி, இவ்வளவு வழக்கு பதிந்த போலீசார் ஏன் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக வழக்குப்பதிந்தார்களா என்ற உங்கள் கேள்விக்கு ஒரே பதில், நீங்களே போலீசுக்கு போன் செய்து ஞாபகப்படுத்துங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.