சொந்த மண்ணில் தொடரை இழந்த இந்தியா. ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதித்து காட்டிய ஆஸ்திரேலியா !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று , 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.


டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50  ஓவர்களில் 272 ரன்களை எடுத்தது. ஆஸ்திரேலியா அணியின் உஸ்மான் கவாஜா சிறப்பாக விளையாடி 100 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் ஹாண்ட்ஸ்காம் சிறப்பாக விளையாடி 52 ரன்களை எடுத்தார். இதனால் ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட்களையும், ஷமி மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் 12 ரன்களில் அவுட் ஆனார். விராட் கோஹ்லியும் நிலைத்து நின்று ஆடாமல் 20 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் ரிஷாப் பாண்ட் மற்றும் விஜய் ஷங்கர் நிலைத்து நின்று ஆடாமல் சிறிது நேரத்தில் அவுட் ஆகி வெளியேறினர். ரோஹித் சர்மா மட்டும் இந்திய அணியின் சார்பில் 56 ரன்களை எடுத்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் 132 இழப்பிற்கு ரன்களை எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ஜாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் பொறுப்பாக விளையாடி இந்திய அணி ஓரளவு நல்ல ஸ்கோரை எடுக்க உதவினர்.

ஜாதவ் 44 ரன்களுக்கும், புவனேஸ்வர் குமார் 46 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி50  ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது. ஆஸ்திரேலியாவின் சம்பா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.