சிட்னி: உயிரிழந்த பின் ஓராண்டு வரை மனித உடல்கள் நகரும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.
உயிர் பிரிந்த பிறகும் மனித உடல்கள் புரண்டு படுக்கும்! ஆஸ்திரேலிய ஆய்வு முடிவில் திடுக் கண்டுபிடிப்பு!

இறந்த பின் எல்லோரது உடலும் அமைதி நித்திரை கொள்வதாக கருதப்படுகிறது. இந்நிலையில், ஆலிசன் வில்சன் என்ற பெண், இறந்தவர்களின் உடலை கடந்த 17 மாதங்களாகக் கண்காணித்து, புதிய திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். ஆம், இதுதொடர்பாக, அவர் ஏஎஃப்பி செய்தி ஊடகத்திற்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், ''இறந்த பின் நமது உடல் ஒருவித பதப்படுத்தப்பட்ட நிலைக்குச் சென்று படிப்படியாக சிதைவடைய தொடங்குகிறது. இதன்போது சடலத்தில் ஒருவித அசைவு நிலை ஏற்படுகிறது. இதனை உற்று கவனித்தால் உயிர் உள்ளதாகவே தோன்றும். ஆனால், அந்த சடலம் சில நேரம் மேலும் கீழுமாகவும் அசைவதை என் கண்ணால் பார்த்தேன்.
இதுபற்றி புகைப்படம், வீடியோ ஆதாரமும் பதிவு செய்துள்ளேன்,'' என்று கூறியுள்ளார். இதற்காக, 17 மாதங்களாக, 70க்கும் அதிகமான சடலங்களை வில்சன் பார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளார். அதனை பார்க்கும் போது உடல் புரண்டு படுப்பது போல் உள்ளது.
அவரது ஆய்வு ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் உள்ள AFTER என்ற ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது. இதற்காக, அவர் மாதந்தோறும் சிட்னியில் இருந்து புறப்பட்டுச் சென்று, ஒருமாதம் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்துவிட்டு, பிறகு வீடு திரும்பி, தனது ஆய்வு முடிவுகளை தொகுப்பது வழக்கமாகும்.
இப்படியாக, 17 மாதங்கள் போராடி, ஆய்வு முடிவை தொகுத்துள்ள வில்சன், அதனை Forensic Science International: Synergy என்ற இதழில் கட்டுரையாக வெளியிட்டுள்ளார்.