மகனின் உயிர் பறிபோன இடத்தில் தாய் செய்த செயல்..! கல் நெஞ்சையும் கரைய வைக்கும் சம்பவம்!

ஆஸ்திரேலியாவில் வன்முறையின்போது உயிரிழந்த 17 வயது மகன் அடக்கப்பட்ட இடத்தில் தாய் துடி துடித்து அழுதது பலரை கண் கலங்க வைத்தது.


கடந்த ஞாயிறன்று மெல்போர்னில் செயின்ட் ஆல்பன்சில் ரயில் நிலையம் அருகே இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்றது. அப்போது தெற்கு சூடானை சேர்ந்த 17 வயது சிறுவன் அகுவர் அகெக் லுவல் என்பவர் கொல்லப்பட்டார். அந்த சிறுவன் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சிறுவனின் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். பூக்கள் மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற லுவலின் தாயார் மார்த்தா மயோலா பூச்செண்டுகளை கீழே பேட்டு கதறி அழுதார். இது காண்போரை கண்கலங்க வைத்தது. இந்த மோதல் தொடர்பாக முதற்கட்டமாக 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் மோதலுக்கு காரணம் என்னவென்று விசாரித்து வருகின்றனர். 

அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக தலைவர் ரிச்சர்ட் டெங், இளைஞர்கள் தங்களை விட வயதில் மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.