நள்ளிரவு! கும்மிருட்டு! அசுரவேகத்தில் காரில் சென்ற பெண்! திடீரென சாலையில் நின்ற மர்ம விலங்கு!

ஆஸ்திரேலியாவில் சாலையின் நடுவே இரண்டு கங்காருக்குள் சண்டையிடுவதை பார்த்த பெண் ஒருவர் அந்த காட்சிகளை படம் பிடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் டிரேசி டேவிஸ் என்ற பெண் கான்பெர்ராவின் வடக்கே இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.​ அப்போது சாலையின் நடுவே வழியை மறித்தவாறு 2 கங்காருக்கள் குத்துச் சண்டை போடுவதை பார்த்து அதை தனது செல்போனில் படம் பிடித்தார். அநேகமாக குடும்பத் தகராறாக இருக்கும் போல.

அதனால்தான் வீட்டில் போட வேண்டிய சண்டையை வீதிக்கு கொண்டு வந்தன இரண்டும். சாலையின் நடுவில் நின்று சண்டை போட்டால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் நீயா நானா என போட்டிப் போட்டுக்கொண்டு குத்துச் சண்டை இட்டதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் பொறுமையாக வேடிக்கை பார்த்தனர். கொஞ்சமாவது வழி விடுமாறு வாகனங்கள் தொடர்ந்து சப்தம் எழுப்பிய போதும் கங்காருக்கள் குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் வாங்கிய வீரர்கள் போல சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒன்றுக்கு ஒன்று நடந்த சண்டையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இதுகுறித்து கங்காருக்களை படம் பிடித்த ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டேவிஸ் கூறும்போது கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்ற சண்டை எதையும் தான் பார்த்ததில்லை என்று தெரிவித்தார். விலங்குகள் சண்டையை பற்றி பிபிசி ஆராய்ச்சி கூறும்போது பொதுவாக ஆண் கங்காருக்கள் கோபமான விலங்குகள் என கூறப்படுபவை.

அமைதியாக இருக்கும் ஆண் கங்காருக்கள் பிரச்சனை என்றால் உடனே கோபம் அடைந்து மோசமாக தாக்கக் கூடிய குணம் கொண்டது. கங்காருக்களின் மூர்க்கத் தனமான தாக்குதலில் இருந்து தப்பிப்பது என்பது கடினமான செயல். கங்காருக்கள் அதிகம் ஆஸ்திரேலியாவில் வசிக்கின்றன. அது குறித்த வீடியோக்களும் பிரசித்தமானவை.

கங்காரு மனிதர்களை தாக்குவதை போன்றும், விரட்டி விரட்டி உதைப்பது போன்றும் நிறைய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. கங்காருக்குள் மனிதர்களை தாக்குவது மிகவும் இயல்பான காரியமாகவே ஆஸ்திரேலியாவில் மாறிவிட்டது என்றே கூறலாம். இந்த கங்காருக்களில் உள்ள தம்பதி கூட ஒன்றை ஒன்று சரிசமமாக சண்டையிட்டு போராடுகிறது.

ஆனால் நம் குடும்பங்களில் சண்டை வரும்போது மனைவியான கோவை சரளா கணவன் வடிவேலுவை துவைத்து எடுக்கும் காட்சிகள் மட்டுமே கண்முன் வந்துபோகிறது. எதிர்த்து ஒரு அடி கூட கொடுக்க முடியாத நிலையில் வடிவேலு போன்ற லட்சக்கணக்கான ஆண்களுக்கு கங்காரு சண்டை டெடிக்கேட்டிங்.