குழந்தை பிறந்ததால் உடல் பருத்து, தொப்பை விழுந்து அழகிழந்த இளம்பெண்ணுக்கு கணவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

குழந்தை பெற்றதால் தன்னுடைய அழகான தோற்றம் மறைந்துவிட்டதாக கடிதம் எழுதிய மனைவிக்கு பலரையும் நெகிழச்செய்யும் வகையில் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது கணவர் கடிதம் எழுதியுள்ளார்.


ஆஸ்திரேலியாவை சேர்ந்த லாரா மஸ்ஸா என்ற 33 வயதான பெண் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த பிறகு கணவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் நீங்கள் காதலித்தபோது இருந்த அழகான பெண்ணாக நான் இப்போது இல்லை. குழந்தை பெற்றுக்கொண்டதால் வயிற்றில் கோடுகளும், தொங்கும் தசையுமாக இருக்கிறது. நீங்கள் ரசிக்கும்படி இனி ஜீன்ஸ் அணியமுடியாது. லெக்கிங்ஸ் மட்டுமே அணியமுடியும் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

அதற்கு கணவர் எழுதிய பதில் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் அனைத்து பெண்களையும் நெகிழ்ச்சி அடையும் வகையில் இருந்தது. நான் காதலில் விழுந்த உடல் நம்முடைய சந்ததியை வளர்த்துள்ளது. அவர்களுக்கு பாலூட்டி உள்ளது. உயிர்களை உருவாக்கி உள்ளது. உன்னுடைய உடலுடன் தினமும் நான் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். முதலில் காதல் என்றால் என்னவென்று தெரியாமலேயே இருந்தேன். ஆனால் உன் உடல் செய்த அற்புதங்களை கண்டு ஆச்சரியப்பட்டேன். எனவே அதற்காக நான் உனக்கு நன்றி கூறுகிறேன் என கணவர் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்.

தாய்மைக்கு பிறகு அழகு குறைகிறது என்பதற்காக கவலைப்படத் தேவையில்லை என்பதை உணர்த்துவதாகேவே இருந்தது அந்த கடிதம். இது குறித்து லாரா தெரிவிக்கையில் குழந்தைகளிடம் நம் உடலில் ஏற்படும் வளர்ச்சி குறித்தும் மாற்றம் குறித்தும் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால் நாம் நம் உடல் படைக்கப்பட்டதன் நோக்கத்தை மறந்து விடுகிறோம் என்கிறார். லாரா இந்த கடிதத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ள அந்த கடிதத்தை படித்த அனைவரும் நெகிழ்ந்து போய் உள்ளார்கள்.