உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு! தடைகளை தாண்டி அணியில் இடம்பிடித்த வார்னர், ஸ்மித்!

உலகக்கோப்பை கிரிக்கெட்டுகான ஆஸ்திரேலியா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 இங்கிலாந்தில் வருகிற மே மாதம் 30ம் தேதி தொடங்கவுள்ளது. இந்து தொடருக்கான அணியை ஏற்கனவே நியூஸிலாந்து அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உலகக்கோப்பைக்கான அணியை வெளியிட்டுள்ளது.  இந்த அணியின் பந்தை சேத படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஓராண்டு தடை முடிந்த காரணத்தினால் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெரிதும் எதிர்ப்புக்குள்ளான இவர்களை அணியின் சேர்க்க வேண்டாம் என்று பல தரப்பினரும் வேண்டுகோள் விதித்திருந்தனர். அனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் இவர்களை அணியில் சேர்த்து அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். 

உலகக்கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலியா அணி இதோ :

1. பின்ச் 2. பெஹென்றூப் 3. அலெஸ்  கேரி  4. நாதன் கோல்டெர் நைல் 5. பேட் கம்மின்ஸ் 6. உஸ்மான் கவாஜா 7. நாதன் லயன் 8. ஷான் மார்ஷ் 9. மேக்ஸ்வெல் 10.ரிச்சர்ட்சன் 11.ஸ்டீவ் ஸ்மித் 12. ஸ்டார்க் 13. டேவிட் வார்னர் 14. ஸ்டானிஸ் 15. ஆதம் ஜாம்பா 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹண்ட்ஸ்காம் மற்றும் ஹேசல்வுட் அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் இந்திய அணி இன்று மாலை உலகக்கோப்பை அணியை வெளியிடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.