ஆஸியை தெறிக்க விட்ட பும்ரா…

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா தனது திறமையான பந்து வீச்சில் ஆஸ்திரேலியா வீரர்களை திணறடித்தார்.


பும்ரா ஆஸ்திரேலியா அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடி கொடுத்தார். ஜடேஜா 2 விக்கெட்களையும்இஷாந்த் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர். ஏற்கனவே இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 443 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. புஜாரா 106 ரன்களையும் , கோஹ்லி 82 ரன்களையும் , மாயங் அகர்வால் 76 ரன்களையும் , ரோஹித் 63* ரன்களையும் எடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை விட 292 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் பும்ரா தனது திறமையான பந்து வீச்சில் ஆஸ்திரேலியா வீரர்களை திணறடித்தார்.