சிறப்பான சம்பவம் செய்து இந்தியாவை வீழ்த்திய அஸ்டோன் டர்னர்!

இந்திய மற்றும் ஆஸ்திரே்லிலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடினர். ரோஹித் சர்மா 91 ரன்களும்,ஷிகார் தவான் அபாரமாக விளையாடி 143 ரன்களும் எடுத்தனர். அவர்களுக்கு அடுத்தபடியாக ரிஷாப் பாண்ட் 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 358  ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா அணியின் பேட் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

 பின்னர் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமாக இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் பின்ச் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். எனினும் உஸ்மான் கவாஜா மற்றும் ஹண்ட்ஸ்காம் ஜோடி சிறப்பாக விளையாடியது. இந்த ஜோடி இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது.

சிறப்பாக விளையாடிய கவாஜா 91 ரன்களுக்கு வெளியேறினார். ஹண்ட்ஸ்காம் சிறப்பாக விளையாடி சதமடித்து  117 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அணி வெறி பெற மிகவும் கடினமாக இருந்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் டர்னர் அதிரடியாக விளையாடி இந்திய பந்து வீச்சாளர்களை சோகத்தில் ஆழ்த்தினார். இவர் 43 பந்துகளில் 84 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

 இதனால் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை2-2  என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி போட்டி வருகிற புதன் கிழமை டெல்லியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.