40ரூபாய்க்காக அண்ணன் தலையில் சுத்தியலால் ஓங்கி ஒரு அடி அடித்த தம்பி! பிறகு நேர்ந்த விபரீதம்!

ரூ.40 பணத்திற்காக, சொந்த சகோதரனையே கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் பகுதியில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சகோதரர்கள் 2 பேருமே பள்ளி மாணவர்கள் ஆவர். இவர்களில், மூத்த சகோதரனிடம் இருந்து, ரூ.40 பணம் தரும்படி, அவனது தம்பி கேட்டுவந்துள்ளான்.

இதன்பேரில், 2 பேருக்கும் இடையே நேற்று கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. இதில், மன உளைச்சல் அடைந்த தம்பி, தனது அண்ணனை பழிவாங்க திட்டமிட்டுள்ளான்.

இதன்படி, இன்று (பிப்ரவரி 27) பிற்பகலில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மூத்த சகோதரன் வீட்டில் உறங்கியுள்ளான். அப்போது, அண்ணன் என்றும் பாராமல் சுத்தியலை எடுத்து, அவனது தலையில் அடித்து, கொடூர தம்பி கொலை செய்துள்ளான். 

இதுபற்றி தகவல் தெரியவந்ததும் விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், கொலை நடந்த இடத்தில் இருந்த சிறுவன், கொலை செய்ததாக, ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவனை கைது செய்தனர். 

ரூ.40 பணத்திற்காக, அண்ணனையே தம்பி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அவுரங்காபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமை என்ன என்றால் இருவரும் ஒரே நேரத்தில் ஒட்டிப் பிறந்த ரெட்டையர்கள் தான்.