இந்துக்கள் விவகாரங்களில் தலையிடாமல் வீரமணியால் எப்போதும் இருக்கவே முடியாது என்பதற்கு உதாரணமாக மீண்டும் அத்திவரதரை வம்புக்கு இழுத்திருக்கிறது விடுதலை நாளேடு.
அத்திரவரதர் மரக்கட்டை பொம்மையாம்! மீண்டும் இந்துக்களை வம்பிழுக்கும் வீரமணி!
இந்தியாவின் முதல் குடிமகன் வந்து வணங்கிச்செல்லும் நேரத்தில், வேண்டுமென்றே அத்திரவரதர் பற்றி செய்தி வெளியிட்டுள்ளது. குமுதம் பத்திரிகையில் வெளியான ஒரு கார்ட்டூனுக்கு பதில் அளிப்பது போன்று, அத்திவரதரை கன்னாபின்னாவென்று விளாசியிருக்கிறது விடுதலை நாளிதழ். இதோ, அந்த தலையங்கத்தில் இருந்து சிலபகுதிகள் மட்டும்.
காஞ்சிபுரத்தில் அத்தி மரக்கட்டையை வைத்துப் பொம்மை விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வருகின்றார்கள். ஊடகங்கள் ஊதிப் பெருக்கி செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அத்திவரதரை தரிசித்து விட்டுச் சென்ற செட்டித் தாங்கல் (வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த) குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சாலை விபத்தில் பரிதாபமாக பலியானார்களே - இதுபற்றியெல்லாம் இந்தக் குமுதங்களின் கண்களுக்குத் தெரியாதா?
வரதராஜ பெருமாள் கோயில் சன்னதியில் பட்டப் பகலில் கோயில் மேலாளர் சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டாரே - அதன் காரணமாக சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சிறைக்குப் போனாரே - நினைவில்லையா? என்ன செய்தார் வரதராசர்? ஒரு பொம்மையை வைத்து இப்படியும் ஒரு பிழைப்பா? வெட்கக் கேடு! பக்தி என்ற போதையில் சிக்கித் தவிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதாலேயே, அது தான் உயர்ந்தது என்று எடுத்துக் கொள்ள முடியுமா?
ஆன்மிகம் கல்வி உரிமையைக் கொடுக்கவில்லை, தீண்டாமையை ஒழிக்கவில்லை, தந்தை பெரியாரின் நாத்திகம்தான் இவற்றைக் கொடுத்தது என்பதை மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு - மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிளவுபடுத்தி அடிமைப் படுத்தும் ஆன்மிகத்துக்கு ஆலவட்டம் சுற்றுவது நாட்டை மீண்டும் ஆரியத்துக்கு அடி பணிய செய்வது தானே.
கும்பகோணம் மகா மகக் குளத்தில் மகம் முடிந்த நிலையில், அந்தக் குளத்துத் தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அதன் முடிவை வெளியிட்டாரே நினைவிருக்கிறதா? அந்நீரில் 25 சதம் மலக்கழிவும், 40 சதம் மூத்திரக் கழிவும் இருந்ததாக வெளியிட்டாரே - அவர் என்ன திராவிடர் கழகத்துக்காரரா? மலமும், மூத்திரமும் கொப்பளிக்கும் நீரைக் குடிக்கும் பக்தி முற்றிய மக்கள் அதிகம் என்பதால் அதுதான் அறிவானதா என்ற ரீதீயில் திட்டியிருக்கிறார்கள்.
மக்களின் குறிப்பாக இந்து மக்களின் நம்பிக்கையை சிதறடிப்பதில் வீரமணிக்கு அப்படி என்னதான் சந்தோஷமோ?