அத்திவரதர் வரலாற்று தில்லுமுல்லு - பகுதி 2

அடுத்து புலவர் பெருமாள் சொல்லும் அதிர்ச்சி தகவல் 1063ல் சோழநாட்டை வீர சோழன் என்கிற அரசன் ஆண்டதாகவும் அவன் புத்தர்களுடன் ( பெளத்தர் ) உறவு பூண்டவன் என்கிறார்.


இரண்டுமே தவறான செய்திகள். சோழநாட்டை 1064 வரை ஆண்டது இரண்டாம் ராஜேந்திர சோழன்,அவனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்தவன் முதலாம் குலோத்துங்கன்.இருவருமே பெளத்த மதத்தை பின்பற்றியவர்கள் இல்லை.தீவிர சைவர்கள்.இன்னும் சொல்லப்போனால் ராஜராஜ சோழனால் தான் சனாதன தருமம்  தமிழகத்தில் வலிமை பெற்றது.மகேந்திரப் பல்லவன் சைவ மதத்தை தழுவிய பிறகு பெளத்தர்களுக்கு தமிழகத்தில் வலுவான ஆதரவில்லை.

ஆனால் புலவர் பெருமாள் தனது நூலில் வீர சோழன் புத்தர்களுடன் உறவு பூண்டதுடன், அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த காஞ்சியில் பல வைனவத் தலங்கள் சேதப்படுத்தப் பட்டன என்கிறார். குறுப்பாக வேளுக்கை பெருமாள் கோவிலையும்  நிலாத்துண்டத்து பெருமாள் கோவிலையும் வீர சோழன் சேதப்படுத்தினான் என்கிறார்.அதோடு வீர சோழனால் வரதராஜப் பெருமாள் கோவிலும் சேதமடைந்திருக்கும்,திருக்கச்சி நம்பியின் புண்ணியத்தில் தப்பியது என்கிறார்.

அதிலும் ஒரு சந்தேகம் இருக்கிறது,ராமானுஜரின் குருவான திருக்கச்சி நம்பிகள் தம் இறுதி நாட்களை கழித்தது திருப்பெரும் புதூரகொள்ளுங்கள்.எந்த அரச ஆதரவும் இல்லாத பெளத்தர்கள் எப்படி வரதராஜப் பெருமாள் கோவிலையும், வேளுக்கை பெருமாள் கோவிலையும்,நிலாத்துண்டத்து பெருமாளையும் தாக்கி இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறதல்லவா.இந்தக் கேள்வி புலவர் பெருமாளுக்கும் எழுந்திருக்கும்,ஆனால் உண்மையான காரணத்தை இப்போது சொன்னால் நம்பக்கூட ஆளிருக்காது என்று அவர் நினைத்திருக்கலாம்.கொஞ்சம் கமலஹாசனின் 'தசாவதாரம்' படத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

இந்த சம்பவங்கள் நடக்கும் காலகட்டத்தில் சுவாமி ஐய்யப்பன் பிறக்கவில்லை.அப்போது சைவமும் ,வைணவமும் வெவ்வேறு மாதங்கள். பெருமாள் கோவில் பிரசாதத்தை சைவர்கள் சாப்பிட மாட்டார்கள். கொள்வினை கொடுப்பினை கிடையாது.அன்றைய வைணவ கோட்பாடுகளின் படி நாராயணன் என்கிற பெருமாளைத் தவிர மற்ற தெய்வங்கள் எல்லாம் ' வேதாந்திரங்கள்' என்று அழைக்கப் பட்டன.அதாவது வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் ஒரே பரம்பொருள் நாராயணன் மட்டுமே.

அதனால் வேதாந்தரங்களாகிய  சிவன்,முருகன்,விநாயகர் முதலியோரை வைணவர்கள் வணங்க மாட்டார்கள்.இதைத்தான் ' மறந்தும் புறந்தொழா மாந்தர் ' என்கிறார் திருமழிசை ஆழ்வார்.அதாவது மறந்தும் சைவ மூர்த்தங்களை வைணவர்கள் தொழமாட்டார்களாம்.திருவரங்கம் பெருமாள் மழைக்காக திருவானைக்கா கோவிலில் ஒதுங்கியதைக் கூட ஒப்புக் கொள்ளாத ராமனுஜனை மூன்றாம் குலோத்துங்கன் கொல்ல முயன்றதை கமல் தனது தசாவதாரம் படத்தில் சித்தரித்திருப்பார்.

அதே மூன்றாம் குலோத்துங்கன் சிதம்பரம் கோவிலுக்குள்  இருந்த பள்ளிகொண்ட பெருமாளை தூக்கிப் போய் கடலில் போட்டதையும் காட்டி இருப்பார்.இதுதான் அன்றைய நிலை.சோழன் பெருமாள் கோவிலை இடிக்க முயன்றதற்கு காரணம் சைவ,வைணவப் பகைதான்.அதை மறைக்க பெளத்தர்களை தெலுங்கு பட வில்லன்கள் ரேஞ்சுக்கு புலவர் பெருமாள் சித்தரித்து இருப்பதையும் அதில் உள்ள நகை முரண்களையும் இறுதிப் பகுதியில் பார்ப்போம்.