பிராமணப் பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியவர்! கவுசல்யாவின் 2வது கணவர் மீது அடுத்த புகார்!

பிராமணப் பெண் ஒருவரை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று மறுமணம் செய்து கொண்டுள்ள கவுசல்யாவின் 2வது கணவர் சக்தி மீது புது புகார் எழுந்துள்ளது.


  நிமிர்வு கலையகம் என்ற பெயரில் இயங்கி வரும் சமூக அமைப்பின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக சக்தி இருந்து வருகிறார். பறை இசைக்குழு வைத்து நடத்தி வரும் சக்தி நேற்று உடுமலை சங்கர் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கவுசல்யா – சக்தி திருமணம் முடிந்த கையோடு சர்ச்சைக்குரிய வகையில் ஏராளமான புகார்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

   நிமிர்வு கலையக பெண் ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அந்த அமைப்பில் இருந்து சக்தி நீக்கப்பட்டதாக முதலில் ஒரு புகார் வெளியானது. மேலும் நிமிர்வு கலையகத்திற்கு வந்த திருநங்கை ஒருவரை கூட சக்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் நிமிர்வு கலையகத்தில் தங்கியிருந்த பெண் ஒருவரை இரவில் அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக கருதி சக்தி பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் புகார்கள் முன்வைக்கப்பட்டன. 

   இந்த புகார்களை நிமிர்வு கலையகத்துடன் இணைந்து பல்வேறு சமூக நிகழ்வுகளில் பங்கேற்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் ஜீவானந்தம் தனது பேஸ்புக்கில் பதிவில் வெளிப்படையாக கூறியிருந்தார். ஆனால் இந்த புகார்களை தற்போது வரை சக்தி மறுக்கவும் இல்லை. விளக்கம் அளிக்கவும் இல்லை. இந்த நிலையில், டென்மார்க்கின் கோபன்ஹகனில் இசைக்குழு ஒன்றை வைத்துள்ளார் அஸ்வினி கணேசன்.

    மேலும் பறை இசையிலும் தனக்கு ஆர்வம் அதிகம் என்று அஸ்வினி கணேசன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அஸ்வினியும் தனது பேஸ்புக் பக்கத்தில் கவுசல்யா – சக்தி திருமணத்தை குறிப்பிட்டு சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் பிராமணப் பெண் ஒருவரை சக்தி காதலித்ததாகவும், இந்த காதலின் விளைவாக அந்த பெண் கர்ப்பமானதாகவும் அஸ்வினி தெரிவித்துள்ளார். ஆனால் தனது எதிர்கால வாழ்க்கைக்கும், புகழுக்கும் அந்த பிராமணப் பெண் உதவமாட்டார் என்று கருதி காதலை சக்தி முறித்துக் கொண்டதாகவும் அஸ்வினி கூறியுள்ளார்.

    பார்ப்பணர்களை எதிர்ப்பதாக கூறிக் கொண்ட சக்தி பார்ப்பண பெண் ஒருவரை காதலித்துவிட்டு அந்த பெண் தன்னை ஆதிக்கம் செலுத்துகிறாள் என்று கூறி விட்டுச் சென்றதுடன் காதலின் விளைவாக உருவான கர்ப்பத்தையும் கலைத்துள்ளதாக அஸ்வினி கூறியுள்ளார். அந்த கரு கலைக்கப்பட்டது ஆணவக் கொலை இல்லையா? என்றும் அஸ்வினி கேள்வி எழுப்பியுள்ளார். 

   கவுசல்யாவின் கணவர் உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட போது ஆணவக் கொலை என்று குரல் கொடுத்தவர்கள் அந்த பிரமாணப் பெண் தன் சிசுவை இழந்ததற்கு யாரும் குரல்கொடுக்கமாட்டார்களா? ஆணவக் கொலை செய்யப்படும் வயது வந்தவர்களுக்கு மட்டும் தான் குரல் கொடுப்பீர்களா? சிசுவுக்கு குரல் கொடுக்கமாட்டீர்களா?

    எனவும் அஸ்வினி வினவியுள்ளார். இந்த அஸ்வினி தனக்கும் சக்திக்கும் இடையிலான தொடர்பு என்ன என்பது குறித்து விளக்கவில்லை. மேலும் எதற்காக இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளேன் என்பது பற்றியும் சொல்லவில்லை.