அரசியலுக்கு வரப்போவது விஜய்யா? அஜித்தா? வைரல் ஜோதிடர் சொல்வது என்ன தெரியுமா?

இப்போது மீடியாவில் ஜோதிடர் பாலாஜிஹாசன்தான் ஹாட் சரக்கு. அவர் என்ன சொன்னாலும் ஒளிபரப்ப, அத்தனை சேனல்களும் தயாராக இருக்கின்றன. காரணம் உங்களுக்கே தெரிந்ததுதான்.


அதாவது,  சேலம் மாவட்டம் செவ்வாய்ப் பேட்டையைச் சேர்ந்த ஜோதிடர் பாலாஜிஹாசன், சமீபத்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அரை இறுதிக்கு இந்தியா - நியூசிலாந்து தகுதி பெறும் என்றும் இறுதி போட்டிக்கு இந்தியா செல்லாது என்றும் முன்கூட்டியே கூறியிருந்தார்.

அவர் சொன்னது அப்படியே நடந்துவிட்டது. அதனால், அவருக்குப் புகழ் பெருமளவு பெருகி வருகிறது. இந்த நேரத்தில் ரஜினி, விஜய், அஜித்தின் அரசியல் பிரவேசம் குறித்து அவர் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். 

அதில், ரஜினி அரசியலுக்கு வருவார். ஆனால் பெருவாரியான மக்கள் ஆதரவு அவருக்கு இருக்காது. கமல் தவறுகளை சுட்டிக்காட்டும் அரசியல் தலைவராக மட்டுமே இருப்பார். விஜய், அஜித் இருவரில் விஜய் அரசியலுக்கு இப்போது வரமாட்டார். அஜித் எந்தகாலத்திலும் அரசியலுக்கு வரமாட்டார். 

விஜய்க்கு பிகில் படம் துப்பாக்கி படத்திற்கு பிறகு இன்னொரு மைல்கல் படமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். பாலாஜி கருத்துப்படி ரஜினி அரசியலுக்கு வருவது உறுதிதானாம். ஆனால், வெற்றி கிடைக்காதாம். பார்த்துடலாம்.