மாநிலத்திலேயே முதல் மாணவிக்கு நேர்ந்த கொடூர மரணம்! நண்பனுக்கு மரண தண்டனை! தாய்க்கு ஆயுள் தண்டனை!

அசாம் மாநிலத்தில் தோழியைக் கொன்று எரித்த நண்பனுக்கு மரண தண்டனையும் அவனது தாய் மற்றும் சகோதரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது


கௌஹாத்தியை சேர்ந்தவர் ஸ்வேதா. அங்குள்ள கல்லூரி ஒன்றில் வர்த்தகப் படிப்பு படித்து வந்தார். கல்லூரியில் கோவிந்த் சிங் என்பவரை ஸ்வேதா காதலித்தார். இவர் 12ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்.

இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கோவிந்த் வீட்டுக்கு ஸ்வெதா சென்ற நிலையில் அவர் வீட்டு குளியலறையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அவர் குளியலறைக்குள் சென்று தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டதாக கோவிந்த் அவரது தாய் மற்றும் சகோதரி ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் அதனை நம்ப மறுத்த போலீசார் ஸ்வேதாவின் மரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்  முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர்கள் பின்னர் அதிர்ச்சி தரக்கூடிய  உண்மைகளை ஒப்புக் கொண்டனர்.

ஸ்வேதா வீட்டுக்கு வந்தபோது இருவருக்கும் திருமணம் தொடர்பான பேச்சு எழுந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் கோவிந்த் ஸ்வேதாவை தள்ளி விட்டதாக கூறினர். இதில் தலை சுவற்றில் மோதியதால் ஸ்வேதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து கோவிந்தின் தாயும் சகோதரியும் கொலையை மறைக்க உதவி செய்ததும் ஸ்வேதா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த அவர்கள் அவரை தீவைத்துக் கொளுத்தியதும் தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது கோவிந்த் சிங்காலுக்கு மரண தண்டனையும் அவரது தாயார் மற்றும் சகோதரிக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்