பைபாஸ் சாலையில் அசுர வேகம்! நின்று கொண்டிருந்த லாரியில் மோதிய மாருதி எர்டிகா..! உடல் நசுங்கி 8 பேர் பலியான பரிதாபம்!

கோர விபத்தில் திருமணவிழாவிற்கு சென்று திரும்பிய 8 இளைஞர்கள் உயிரிழந்த பரிதாபம் நடந்துள்ளது.


அசாம் மாநிலம் டேஸ்பூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாப்பிள்ளையின் நண்பர்கள் 8 பேர் ஒரே காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்த பின்னர் அதே காரில் 8 இளைஞர்களும் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலையில்  அவர்களின் மாருதி எர்டிகா கார் மிக வேகமாக சென்றுகொண்டிருந்தது. 

அப்போது பழுதான சரக்கு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்தது. 8 இளைஞர்கள் சென்ற கார் இடதுபுறமாக மற்ற வாகனங்களை ஓவர்டேக் செய்ய முயன்றபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

காரில் பயணம் செய்த 8 இளைஞர்களும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவர்களுடைய உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மதுபானம் குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டினார்களா, அல்லது சொந்த ஊருக்கு சீக்கிரம் செல்லவேண்டும் என்பதற்காக அதிவேகமாக கார் ஓட்டப்பட்டதாக என விசாரணை மேற்கொண்டு வருகிறது போலீஸ். இதுமட்டுமின்றி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி உண்மையிலேயே பழுது காரணமாக நின்றதா? அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரித்து வருகிறது.