3 சகோதரிகளை நிர்வாணமாக்கி போலீசார் அரங்கேற்றிய விபரீதம்! போலீஸ் ஸ்டேசனில் அரங்கேறிய பதைபதைப்பு சம்பவம்! அதிர வைக்கும் காரணம்!

அசாமில் வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞரின் 3 சகோதரிகளை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு நிர்வாண நிலையில் நடந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அசாம் மாநிலத்தில் வேறு சாதி பெண்ணை காதலித்து பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்தப் பெண்ணை இழுத்துச் சென்று திருமணம் செய்ததாக தெரிகிறது. மணமக்கள் இருவரும் ஊரை விட்டு ஓடியுள்ளனர். இந்நிலையில் பெண்னின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் தனது பெண்ணை கடத்தி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புகாரை ஏற்ற காவல்துறையினர் கடந்த 9ஆம் தேதி விசாரணைக்காக இளைஞரின் வீட்டில் இருந்தால் 3 சகோதரிகள் மற்றும் மூத்த பெண்ணின் கணவரையும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எங்கே என கேட்ட போதும் அவர்கள் யாருக்கும் தெரியாது என பதில் அளித்துள்ளனர்.  

இந்நிலையில் ஆத்திரமடைந்த காவல்துறையினர் அவர்கள் 4 பேரின் உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்தபோது அதற்கு காவல்துறையினர் 4 பேரின் உடைகளை கலைந்து லத்தியால் கடுமையாக தாக்கியதாகவும் பின்னர் பூட்ஸ் காலால் மிதித்து உதைத்தாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மூத்த சகோதரி கர்ப்பமாக இருந்த நிலையில் அவளை காவல்துறையினர் வயிற்றில் உதைத்துள்ளனர்.இதனால் கர்ப்பிணிப் பெண்ணின் கர்ப்பம் கலைந்து விட்டதாக கண்ணீருடன் கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட மூவரும் மனு ஒன்றை அளித்துள்ளனர் இந்த மனுவில் உரிய காவல்துறையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் ஒரு பெண் காவலர் உள்பட 2 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மூவரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கர்ப்பமான பெண் உண்மையில் காரணமாகதான் இருந்தாரா என்பது குறித்து மருத்துவமனை அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என காவல்துறை கண்காணிப்பாளர் கூறியுள்ளார். அசாம் மாநிலத்தில் இந்த மாதிரியாக ஒரு சம்பவம் நடந்தது அப்பகுதியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.