நடுரோட்டில் சதக் சதக்! காதலனை வெறித்தனமாக கத்தியால் குத்திக் கொன்ற காதலி! அதிர வைக்கும் காரணம்!

குவாஹாட்டி: பட்டப்பகலில், காதலனை கத்தியால் குத்திக் கொன்ற காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.


அசாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள நாகோவ்ன் பகுதியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள  பிபிகே காலேஜ் முன்பாக, பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் திடீரென இளைஞரை கத்தியால் குத்திக் கொன்றார்.

இதுபற்றி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர். விசாரணையில்,  கொலையை செய்த பெண் பிபிகே காலேஜில் முதலாமாண்டு படிக்கும் ருனுமா அகமது என தெரியவந்தது. 

ருனுமா, மொகிதுல் இஸ்லாம் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். ஆனால், சில நாள் முன்பாக, திடீரென மொகிதுல் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

இதனால் ருனுமா கடும் ஆத்திரமடைந்துள்ளார். சிறிது நேரம் பேசவேண்டும் என, மொகிதுலை காலேஜ் வாசலுக்கு அழைத்து வந்த ருனுமா, திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் அவனை பலமுறை குத்தி கொன்றார். பிறகு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுபற்றி வழக்குப் பதிந்த போலீசார், அந்த பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.