விவகாரமான வீடியோ வெளியான விவகாரம்! கதறும் பிரபல நடிகை! போலீஸ் விசாரணை!

திருவனந்தபுரம்: சமூக ஊடகங்களில் பல வித மிரட்டல்கள் வருவதால், நடிகை ஆஷா சரத் போலீசில் புகார் அளித்துள்ளார்.


மலையாளத்தில் திரிஷ்யம், தமிழில் பாபநாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஆஷா சரத். இவர், எவிடே என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரோமோஷனுக்காக, சர்ச்சைக்குரிய வகையில் ஒரு வீடியோ, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

அதில், கண்ணீர் விட்டு அழுதபடி, தலைவிரி கோலமாக, தனது கணவரை காணவில்லை என்றும், தகவல் தெரிந்தால், கீழ்க்கண்ட போலீஸ் நிலையத்தை தொடர்புகொள்ளுங்கள் என்றும் ஆஷா சரத் கூறியிருந்தார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்ய தொடங்கினர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அதன் பின்னணி பற்றி ஆஷா சரத்,  மறு விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். படத்தின் புரோமோஷனுக்கு இப்படி செய்யப்பட்டது என்றுஅவர் கூறியதும், ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்தியதாகக் கூறி, தற்போது ஆஷா சரத்தை பலரும் கண்டிக்க தொடங்கியுள்ளனர். இதில் சிலர் எல்லை மீறி அவருக்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல் விடுத்தும் உள்ளனர். 

அத்துடன், இடுக்கியை சேர்ந்த மஜித் என்பவர், படத்தின் புரோமோஷன் என்ற பெயரில், ஆஷா சரத் வெளியிட்டுள்ள வீடியோ மிக தவறான முன் உதாரணம் என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, போலீசில் புகார் அளித்துள்ளார். 

இந்நிலையில், ஆஷா சரத்தும், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாக, தனிப்பட்ட முறையில் பலரும் என்னை மிரட்டல் விடுப்பதாக, அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.