ஆசை படத்தில் தல ஜோடி சுவலட்சுமி இப்ப எப்படி இருக்கார் தெரியுமா? அந்த புகைப்படம் உள்ளே!

ஆசை படத்தில் நடித்த சுவலட்சுமி தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.


வசந்த் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆசை. இப்படத்தில் சுவலட்சுமி நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் உடன் லவ் டுடே மற்றும் நிலாவே வா ஆகிய திரைப்படங்களிலும் நடித்து இருந்தார்.

மோகன் ராஜா இயக்கிய சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் நடிக்க சுவலட்சுமி மறுத்துவிட்டார். கடைசியாக அவர் நடித்த படம் நதிக் கரையினிலே. இப்படத்தில் அவரது நடிப்பை பாராட்டி ஸ்டேட் பிலிம் விருது வழங்கப்பட்டது.

அவர் திரையுலகை விட்டு பிரிந்து இருந்த நிலையில் என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆராய்ச்சியாளர் சுவாகட்டோ பானர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடிகை சுவலட்சுமி குடியேறினார். தற்போது அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையதளங்களை கலக்கி வருகிறது.