அமைச்சரவையில் இருந்து ஜேட்லி, சுஷ்மா, நீக்கம்! மோடி - ஷா கூட்டணியின் பகீர் பிளான்!

மத்திய அமைச்சரவையிலிருந்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.


நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. வரும் 30 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்க உள்ளார். இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளவர்களின் பட்டியல் டில்லியில் தயாராகி வருகிறது.

அதன்படி தற்போது சீனியர்களாக உள்ள மத்திய அமைச்சர்கள் பலர் அவர்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளனர். வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் சுஸ்மா சுவராஜ் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அவர் ஏற்கனவே கூறிவிட்டார். இதனால் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர் பதவி நிர்மலா சீதாராமன் இடம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் மத்திய நிதியமைச்சராக உள்ள அருண் ஜேட்லியும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர் மாநிலங்களவை எம்பி ஆக இருந்து வருகிறார். ஜெட் அருகில் இருந்த பதவிக்காலமும் இன்னும் மூன்று மாதங்களில் முடிவடைய உள்ளது. மேலும் அவர் உடல் நலக் கோளாறு காரணமாக அடிக்கடி அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். எனவே அவர் நிதி அமைச்சர் பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அருண் ஜெட்லி வைத்து வரும் நிதி அமைச்சர் பதவி தற்போது பாஜகவின் பொருளாளராக இருக்கும் பியூஸ் கோயல் இடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அருண் ஜெட்லி சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது பியூஸ் கோயல் தான் நிதியமைச்சராக செயல்பட்டார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டையும் கூட அவர் தான் தாக்கல் செய்தார். எனவே மோடியின் புதிய அமைச்சரவையில் பியூஸ் கோயல் நிதியமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.+