அருண் ஜேட்லிதான் ப.சிதம்பரத்தை காப்பாற்றி வந்தாரா..? அடுத்த கைது பிரதர்ஸ்?

கடந்த பா.ஜ.க. ஆட்சியில் சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று மோடி எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டார்.


ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் எல்லாம் அருண் ஜேட்லி கைவண்ணம். அதனால்தான் அருண் ஜேட்லியை அவ்வப்போது சுப்பிரமணியன் சுவாமி திட்டிக்கொண்டே இருந்தார்.

ஆனால், அவர் உடல் நலம் குன்றியதுமே, சிதம்பரத்துக்கு சிக்கல் ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் எல்லா இடங்களிலும் ஜேட்லிதான் ஆட்கள்தான் நிரம்பியிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் அகற்றுவதற்குத்தான் இத்தனை நாட்களும் பிடித்தது.

2019 தேர்தல் முடிந்ததும் அருண் ஜேட்லி உடல்நிலை திடீரென முன்னேற்றம் அடைந்தது. மீண்டும் பதவி கொடுக்கும் அளவுக்கு தேறிவிடும் என்று நம்பப்பட்ட நேரத்தில்தான் மீண்டும் சிக்கலாகி கோமா நிலைமைக்குப் போனார். 

ஜெட்லி எப்போது கோமா நிலைக்குச் சென்றாரோ, அப்போதே ப.சிதம்பரத்தின் கைது வேலை தொடங்கப்பட்டுவிட்டது. இது தொடக்கம்தான், இன்னும் ஏர் செல் வழக்கெல்லாம் இருக்கின்றது. நிறைய சுற்றியடிக்கும் என்கிறது டெல்லி சோர்ஸ்.

சிதம்பரம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள சில தி.மு.க. புள்ளிகளுக்கும் ஜெட்லிதான் ஆதரவாக இருந்தார். அதனால்தான் இத்தனை காலமும் தப்பி வந்தார்கள். இனி அதற்கான வாய்ப்பில்லை என்கிறார்கள். இப்போது தமிழகத்து ஆட்களுக்கு பா.ஜ.க.வில் உதவி செய்ய யாரும் இல்லை என்பதால், அடுத்தடுத்து காங்கிரஸ், தி.மு.க. ஆட்களின் மீது கைது படலம் அரங்கேறும் என்றே தெரிகிறது.

உஷார் பிரதர்ஸ்... உஷார்!