அத்திவரதரை சந்தித்த ஆர்த்தி! அம்மணி மீண்டும் இந்து மதத்துக்கு வந்துட்டாங்களா..?

நகைச்சுவை நடிகை ஆர்த்தி, அவரது கணேஷ் பற்றி தமிழகத்துக்கு அறிமுகம் தேவையில்லை.


அவர்கள் சில வருடங்களுக்கு முன்பாக திடீரென ஏஞ்சல் டி.வி.யில் தோன்றி, தாங்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாகச் சொல்லி அதிர்வலையைக் கிளப்பினார்கள். அதாவது ஆர்த்தியின் அம்மா உயிருக்கே போராடியதாகவும், இந்து தெய்வங்கள் எல்லாம் கைவிட்ட நிலையில், ஒரு கிறித்தவ பெண், பைபிளை திறந்து ஜபம் செய்ததும் அம்மா குணமாகி விட்டார் என்றும், அதனால் நான் இயேசுவை ஏற்றுகொள்கிறேன் என்றும் சொன்னார்.

வழக்கமாக ஆர்த்தி என்ன சொன்னாலும் பின்பாட்டுப்பாடும் கணவர் கணேஷும், ஆமா, நானும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டேன். இனிமேல் எங்களுக்கு எல்லாமே இயேசு நாதர்தான் என்று சொன்னார்கள். இடையில் என்ன நடந்ததோ, திடீரென அத்திவரதர் தரிசனத்தில் ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷும் கலந்துகொண்டு மனமுருக வணங்கினார்கள். என்னவென்று விசாரித்தால், இயேசுவின் அருளால் பிழைத்துக்கொண்ட, அவரது அம்மா மீண்டும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டாராம்.

அதனால் ஆர்த்தியும் அவருடைய கணவர் கணேஷும் மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பிவிட்டார்களாம்.  அடப்பாவிகளா... கடவுளை ஏதோ ஏஜென்ட் மாதிரி நினைச்சுக்கிட்டு நல்லது செஞ்சா கும்பிடுறது, இல்லைன்னா கைவிடுறதுன்னு ஆகிப் போச்சே என்று ஆர்த்தியின் நட்பு வட்டாரமே சிரிக்கிறது. ஏதாவது ஒண்ணுல நம்பிக்கை வைங்க ஆர்த்தி, இல்லைன்னா வாழ்க்கை காணாமப் போயிடும்.