பிணங்களுடன் உல்லாசம்! அரக்கோணத்தில் சிக்கிய சைக்கோ கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்!

வீட்டில் தனியாக வசிக்கும் பெண்களிடம் பழகுவதும் பின்னர் அவரைக் கொன்று நகைகள் திருடுவதும் பின்னர் அந்த உயிரற்ற உடல்களுடன் உடலுறவு கொள்வதுமாக சைகோ போல் இளைஞர் ஒருவர் செய்த காட்டு மிராண்டித் தனமான செயலை கண்டு போலீசார் அதிர்ந்து போய் உள்ளனர்.


ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்த திடுக்கிடும் சம்பவம் வெளியாகி உள்ளது. சரோஜா என்கிற மூதாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அம்மிக் கல் போட்டு கொலை செய்யப்பட்டிருந்ததை அடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தமிழகத்தில் அரக்கோணம் அருகே வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் அவரை காவலில் எடுத்து விசாரித்த போது அவர் கூறியது “நான் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுடன் உல்லாசமாக இருந்து வருவேன். பின்னர் புதிய பெண் தொடர்பு கிடைத்தால் அவரைக் கொன்று விட்டு நகைகளுடன் வேறு ஒரு பெண்ணுடன் உல்லாசமாக இருப்பேன்.

கொலை செய்தாலும் மீண்டும் ஒரு முறையாவது அந்த பெண்ணுடன் உடலுறவு செய்ய வேண்டும் என தோன்றும். அதனால் அந்த பிணத்துடனே உல்லாசமாக இருந்து விட்டு புறப்படுவேன்” என்று போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

மேலும் இதேபோல் இந்திராணி என்ற பெண்ணிடனும் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்ததாகவும் ஆனால் அவர் ரயில் மோதி உயிரழந்துவிட்டார் என தெரிவித்த ஆனந்தன். தன்னுடைய எதிரியான நிர்மலாவை கொலை செய்ய வேண்டும் என அடிக்கடி இந்திராணி என்னிடம் தெரிவித்து வந்ததால் அவரையும் கொலை செய்ய முடிவு செய்ததாகவும் கூறினார்.

பின்னர் டெய்லராக இருக்கும் நிர்மலா வீட்டிற்கு சென்று முதலில் நிர்மலாவை அம்மாவை சரமாரியாக தாக்கி மயக்கம் அடைய செய்துவிட்டு பின்னர் நிர்மலாவை ஒரு அறையில் பூட்டி அம்மிக்கல்லை போட்டு கொன்றதாக திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார் மேலும் சடலமாக மாறிய நிர்மலாவுடனும் கொஞ்ச நேரம் உல்லாசமாக இருந்துள்ளார் ஆனந்த்.

ஆனந்த் கூறும் தகவல்களை பார்க்கும்போது ஏற்கனவே நிலுவையில் உள்ள கொலை வழக்குகளை தூசி தட்டிப் பார்த்தால் அந்த சம்பவங்களில் ஆனந்தன் ஈடுபட்டிருக்கிறாரா என தெரியவரும் எனக் கூறிய போலீசார் ஆனந்தனிடமே கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டால் எத்தனை குடும்பங்களை சீரழித்துள்ளான் என தெரியவரும் எனக் கூறினர்.

தனிக் குடித்தனம்தான் சொர்க்கம் என கூறும் பெண்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக இருக்குமா?