மீண்டும் மிரட்ட வரும் முரட்டு சிங்கங்கள் அர்னால்ட், சில்வஸ்டர் ஸ்டாலோன்! கிழட்டு சிங்கம்னு நினைக்காதீங்க!

1982 ம் ஆண்டு வெளியானது சில்வஸ்ட்டர் ஸ்டாலோன் நடித்த ' ஃபர்ஸ்ட் பிளட்'.படத்தின் ஸ்கிரிப்டும் ஹீரோவும் ஸ்டாலோன்!


வியட்நாம் போரில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்க இளைஞர்களின் சார்பாக அமெரிக்க அரசையே எதித்து நின்ற ராம்போ என்கிற ஹீரோ ஒரு இன்ஸண்ட் ஹிட்.அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு,பர்மா,வியட்நாம் என்று பல நாடுகளின் பின்னணெ இதுவரை நான்கு பாகங்களாக வெளிவந்து வெற்றிகதமான பிரண்டாக ஆகிவிட்டனர் ராம்போவும்,சில்வெஸ்ட்டர் ஸ்டெலோனும்.

அதற்கு இரண்டு வருடம் கழித்து வந்தபடம் தி டெர்மினேட்டர். எதிர்காலத்தில் நடக்கும் கதை.உலகை இயந்திரங்கள் ஆளப்போவதை தடுக்கப் போகிறவனை கொல்ல அவன் குழந்தையாக இருக்கும்போதே அனுப்பட்ட எதிர்கால உலகின் கொலைகாரனைப் பற்றியகதை.இதுவும் வரலாறு காணாத வசூலைக் குவித்தது விடுவார்களா,டெர்மினேட்டரும் ஐந்து பாகங்கள் வெளிவந்தது.

1946ல் பிறந்த ஸ்டெலோன், அர்னால்டை விட ஒருவருடம் மூத்தவர்.இரண்டு பேருமே 70 வயதை தாண்டி விட்ட பெருசுகள்.இத்தனை வருடத்துக்கு பிறகு மீண்டும் ஆளுக்கொரு படத்துடன் இப்போது களமிறங்கப் போகிறார்கள்.இந்த முறை ராம்போ மெக்சிகோ போதை மருந்துக் கடத்தக் காரர்களை தேடிப் போகிறார்.வழக்கமான ராம்போ கத்தி.கை எறிகுண்டு பொருத்திய அம்பு எல்லாம் எடுத்துக்கொண்டு கடத்தல் காரர்களால் சிறை பிடிக்கப்பட்ட நண்பரின் மகளை மீட்கிறார்.

அர்னால்ட் டெர்மினேட்டர் - 6ன் கதாசிரியர் டைட்டானிக் , அவதார் புகழ் ஜேம்ஸ் கேமரூன்! சிறுமி ஒருத்தியை கொலை செய்ய எதிர்காலத்தில் இருந்து வருகிறான் ஒரு திரவ உலோகத்தாலான டெர்மினேட்டர். அவனை அர்னால்ட் எதிர் கொள்வதுதான் 'டார்க் ஃபேட்' என்கிற ஆறாவது பாகத்தின் கதை! . ரஜினி,கமல்,சிரஞ்சீவியைத் தொடர்ந்து ஹாலிவுட் பெருசுகளும் ரசிகர்களை கவர வருகிறார்கள், தயாராகுங்கள்.