சித்தியுடன் காதல்! தவறான உடல் சார்ந்த தேடல்! திருமணத்திற்கு திடீர் ஏற்பாடு! நொடியில் நிகழ்ந்த பயங்கரம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் தற்போது தனது திருமணத்திற்கு இடையூறாக இருந்ததால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் ராணுவ வீரர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர் திரவியம் மற்றும் இவரது மனைவி அருள் சத்யாதேவி (30), இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் ஆன நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அருள் சத்யாதேவி தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்துள்ளார்.இந்நிலையில் தனது கணவரின் அண்ணன் மகனான பீட்டர்(28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இருவரும் முதலில் நன்றாக பேசி பிறகு இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து பீட்டர் ராணுவத்தில் பணியாற்றுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் பீட்டர்க்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பதாக முடிவு எடுத்துள்ளனர்.

இதையறிந்த அருள் சத்யாதேவி தன்னை விட்டுவிட்டு நீ எப்படி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் என பீட்டருடன் சண்டை போட்டுள்ளார். இந்நிலையில் தனது திருமணத்தை சத்யா நிறுத்தி விடுவார் என்ற பயத்தில் பீட்டர் இருந்துள்ளார். அப்போது சத்யா இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மணமகள் வீட்டில் காட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சத்யாவை தனிமையில் வரவைத்து மோட்டார்சைக்கிளில் கூட்டிச்சென்று ஒதுக்குப்புறமாக சென்று இருவரும் பேசியுள்ளனர்.அப்போது சத்யா பீட்டரிடம் நீ வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளக்கூடாது தன்னுடன் தான் இருக்க வேண்டும் எனப் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பீட்டர் சத்யாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதற்கு உடந்தையாக அவரது சகோதரர் மற்றும் நண்பரும் செயல்பட்டுள்ளனர.சத்யா வலியால் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து பார்த்தனர். அப்போது பீட்டர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.

அப்போது முட்புதரில் சத்யா இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் பீட்டரின் சகோதரர் அந்தோணியை கைது செய்துள்ளனர். மற்றும் தலைமறைவாக உள்ள பீட்டர் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.