47 வயதான ஆன்டியை திருமணம் செய்யும் ஸ்ரீதேவி மகன்! அதிர்ச்சியில் குடும்பத்தினர்

பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். தற்போது தல அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தினை தயாரித்து வருகிறார்.


இவருக்கு இரண்டு மனைவிகள். இதில் முதல் மனைவிக்கு பிறந்தவர் அர்ஜுன் கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

இவரும் தன்னைவிட 12 வயது மூத்த நடிகையுமான மலைக்கா அரோராவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது .மேலும், பல இடங்களில் ஒன்றாக ஜோடியாக சுற்றி வரும் இவர்கள் மால தீவு, அந்தமான் போன்ற சொகுசான நகரங்களுக்கும் சென்று ஜாலியாக இருந்து  வருகின்றனர்.

இந்நிலையில் தனது மகன் தன்னைவிட அதிக வயது நடிகையை காதலிப்பது பற்றி பேசியுள்ளார் அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூர். மேலும் இந்த இருவருக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது .

இது குறித்து போனி கபூர் பேசியதாவது….

காதல் வேண்டுமானாலும் உண்மையாக இருக்கலாம் ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வதந்தி என்றே நினைக்கிறேன். எல்லாம் மீடியா பரப்பிவிடும் ஒரு பொய் செய்தி தான். எனது மகன் அவனைவிட 12 வயது அதிகமான ஒரு பெண்ணை காதலிப்பது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று பேசியுள்ளார் அவர்