அரியலூர் அருகே மருந்துகள் வாங்க மெடிக்கலுக்கு சென்ற தாத்தா மற்றும் பேத்தியின் மீது எதிரே வந்த லோடு லாரி ஒன்று மோதியதில் சிறுமி சமயோஜிதத்தால் தப்பித்துள்ளார்.
வேகமாக வந்த லாரி சமயோஜிதமாக செயல்பட்ட சிறுமி! நூலிழையில் தப்பிய வைரல் வீடியோ! ஆனால்..?
அரியலூர் பகுதியில் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்த்தவரும் முருகேசன், அதே பகுதியில் உள்ள சின்னக்கடை வீதியில் பொருட்கள் வாங்க தனது பேத்தியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். மற்ற மளிகை பொருட்கள் எல்லாம் வாங்கிய நிலையில் இறுதியாக மருந்தகத்தில் ஒரு சில மருந்துகள் வாங்க வேண்டும் என்பதற்காக ரோட்டின் ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மெடிக்கலுக்கு சென்று மருந்துகள் வாங்கியுள்ளார்.
பின்னர் வந்து பேத்தியை வண்டியில் ஏற்றி வண்டியை எடுக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று மோத வந்துள்ளது. இதனை பார்த்து சுதாரித்துக் கொண்ட சிறுமி விலகியதால் லாரி அவர் மீது மோதவில்லை. ஆனால் லாரியை பார்த்து அதிர்ந்த முருகேசன் தனது பேத்திக்கு எதுவும் ஆகிவிடு மோ என்கிற பதற்றத்தில் இறங்க முனைந்துள்ளார்.
ஆனால் முருகேசனின் வாகனத்தின் மீது லாரி மோதியதில் மோதிய வேகத்தில் முருகேசன் வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் கூட்டம் கூடினர் அப்போது முருகேசன் உடன் வந்த அவரது பேத்திக்கு என்னவாயிற்று என பார்த்தபோது அந்தக் குழந்தை தனது சமயோஜிதத்தை பயன்படுத்தி விபத்தில் எந்த காயமும் இல்லாமல் தப்பித்துள்ளது.
இது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் விபத்தில் காயமுற்ற தன் தாத்தாவை பார்த்து அந்த குழந்தை அழுது நிலையில் அங்கிருந்தவர்கள் தாத்தா மற்றும் பேத்தி இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து இருவரையும் வீட்டிற்கு திருப்பி அனுப்பி வைத்தனர்.