தேர்தல் களத்தில் அணிவகுக்கும் அரியர் பாய்ஸ்... எடப்பாடிக்கு பாராட்டு மழை

இதுவரை எந்த ஓர் அரசும் செய்யாத வகையில், மாணவ சமுதாயத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்திருக்கிறர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.


இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் இரா.விசுவநாதனை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிக் கொண்டு இருந்த போது கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோ‌ஷம் எழுப்பினர்.

அரியர் பாய்ஸ் நாங்கள்.. எங்கள் சாய்ஸ் நீங்கள்.. அரியர் பசங்க நாங்க.. எங்கள் ஓட்டு இரட்டை இலைக்கே.. என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. கல்லூரி தேர்வின் போது அரியர் வைத்திருந்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த பதாகைகளை காட்டி அவர்கள் வரவேற்றனர்.

இதைப் பார்க்கும் பொதுமக்கள், எடப்பாடியாருக்கு மாணவர் வாக்கும், பெற்றோர் வாக்கும் உறுதி. அதனால், அவர் ஆட்சியமைப்பது நிச்சயம் என்கிறார்கள்.