ஃபேஸ் ஆப் பயன்படுத்துறீங்களா? போச்சு.. உங்க போன்ல இருக்கிற அத்தனை தகவல்களுக்கும் ஆபத்து!

பேஸ் ஆப்' செயலியை பயன்படுத்துவதால் தங்களது செல்போனில் இருக்கும் தரவுகளுக்கும், செல்போன் செயல்பாட்டிற்கும் பாதிப்பு


பேஸ் ஆப்' செயலியை பயன்படுத்துவதால் தங்களது செல்போனில் இருக்கும் தரவுகளுக்கும், செல்போன் செயல்பாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுவதாக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று அதிர்ச்சி ரிப்போட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளங்களில் 'பேஸ் ஆப்' பயன்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெகுவாக பரவி வருகிறது. இந்நிலையில் ஆய்வு ஒன்றில் இந்த செயலியை பயன்படுத்துவதால் தங்களது செல்போன்களில் உள்ள தரவுகள் திருடப்பட்டு வருவதாகவும் செல்போன் செயலில் மந்த நிலை ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதளங்களில்  'பேஸ் ஆப்' பயன்படுத்தி தங்களது புகைப்படங்களை எடுத்து அதில் வயதான தோற்றம் மற்றும் குழந்தை போல் உள்ள போட்டோக்களாக மாற்றி அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .இந்த செயலியை இளைஞர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலியானது ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த செயலி மூலம் தங்களது செல்போன்களில் உள்ள அந்தரங்க தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படுவதால் செல்போன் செயல்பாட்டில் மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் ஆராய்ச்சியில் தெரிவித்துள்ளனர்.