OTP இருந்தால் தான் இனி ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியும்! புத்தாண்டு முதல் புதிய முறை!

பாரத் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் அக்கவுண்ட் வச்சிருப்பங்களுக்கு பாதுகாப்பு கருதி அந்த நிறுவனம் சில முன் ஏற்ப்பாடுகளை செய்ய உள்ளது.


எஸ்.பி.ஐ வங்கி ஏடி எம் கார்டுளை பயன்படுத்தி பணம் எடுப்பவர்களின் பாதுகாப்பான பண பரிவர்த்தனை குறித்து உறுதி செய்து கொள்வதற்காக புதிய அறிவிப்பு தந்துள்ளது.

அதன் படி, வரும் ஜனவரியில் 1 ஆம் தேதி முதலாக வங்கியில் 10 ஆயிரம் ரூபாய் வரை பணம் எடுக்கும் நபர்களுக்கு அவர்கள் வங்கி கணக்குடன் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்க்கு ஓ.டி.பி அனுப்பபட உள்ளது.

இந்த ஓடிபி என்னை பதிவு செய்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியும் மேலும் மற்ற வங்கி கணக்காளர்காலுக்கு இந்த விதி பொருந்தாது எனவும் சம்மந்தபட்ட வங்கி கணக்காளர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தகவல்.

மேலும் இந்த முறை மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 8 மணி வரை என சராசரி யாக செயல்பட உள்ளது, இதன் மூலமாக ஏ டி எம் கிளைகளில் அரங்கேறும் குற்றங்களை குறைக்க முடியும் எனவும்,

இந்த முறை வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் அனைத்து எஸ் பி ஐ வங்கி கணக்கு கொண்டுள்ள பயனாளர்களுக்கு உதவும் எனவும் வங்கியின் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.