தாய்ப்பாலை நிறுத்த முடியாமல் தவிப்பா?? இதோ ஏராளமான டிப்ஸ்!!

குழந்தைக்கு பல் முளைத்த பிறகு தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கு பல்வேறு அசௌகரியங்களை ஏற்படுத்தக்கூடும். தாயின் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும். அதனால் கொஞ்சம் கொஞ்சமாக தாய்ப்பாலை வற்ற வைப்பது அவசியம்.


* மல்லிகைப் பூவை அரைத்து மார்பில் பற்றுப்போட்டால் பால் சுரப்பு கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக் கட்டினாலும் பால் சுரப்பு நிற்கும்.

* பால் கட்டிக்கொண்டால், துவரம்பருப்பை ஊறவைத்து கட்டியாக அரைத்து மார்பில் பற்றுப்போடலாம். நன்றாக உலர்ந்து இறுகியதும் கட்டி இருக்கும் பால் வடிந்துவிடும்.

* பால் கட்டி வீக்கமும் வலியும் இருந்தால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி, பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் குறையும்.

 மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே தாய்ப்பாலை நிறுத்தவேண்டும். தாய்ப் பாலை நிறுத்துவதற்கு முன் குழந்தைக்கு அதற்கு நிகரான சத்தான உணவுகளை பழக்கப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும்