தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? அக்டோபர் 23ஐ ஞாபகம் வைச்சுக்கோங்க! போலீஸ் அபராதம் குறையப் போகுதாம்!

திருவிழா என்றாலே சொந்தம் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதுதான் நல்ல அனுபவமாக இருக்கும்.


அதனால் சென்னையில் சம்பாதித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள் தொடங்கி, குடும்பம் குட்டியாக செட்டில் ஆனவர்களும் தீபாவளிக்கு சொந்த ஊர் கிளம்புவார்கள். அவர்களுக்கு இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட தகவல் இது.

சென்னையில் இருந்து தீபாவளிக்கு 5 பேருந்து நிலையங்கள் இருந்து இயக்க படும். திண்டிவனம், திருவணமலை,செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு தாம்பரம் பேருந்து நிலையம் வாயிலாக செல்லும். பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலூர்,ஆரணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொலை தூரம் செல்லும் பேருந்துகள் இயக்க படும். தீபாவளிக்கு அக்டோபர் 23ம் தேதி சிறப்பு கவுண்டர் திறக்க படும். ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகளை இயக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. சென்ற ஆண்டு தீபாவளிக்கு அரசு பேருந்து மூலம் 7 லட்சம் பயணிகளை பயணம் செய்துள்ளனர்.

அரசு பேருந்துகள் சுங்க சாவடிகளில் சீராக இயங்க தனி வரிசை உருவாக்க பட்டுள்ளது. விடுமுறை காலங்களில் கனரக வாகனங்கள் நகரதிர்க்குள் வர கட்டுப்பாடு விதிதுள்ளோம். சென்னையில் மாநகர பேருந்துகளை சரியான இடைவெளியில் இயக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க பட்டுள்ளது. முன்பிருந்த காலங்களை விட தற்போது அரசு பேருந்துகளுக்கு மக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் அபராதத்தின் அளவை குறைக்க போக்குவரத்து ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. கூடிய விரைவில் இது சம்மந்தமான அரசாணை கூடிய விரைவில் வெளியிடப்படும். கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.