ஜியோ வாடிக்கையாளரா நீங்கள்! இன்னும் வரப்போகுது நிறைய ஆப்புகள்!

வியாபாரத்தில் எதுவுமே இலவசம் இல்லை என்பதுதான் நியதி. ஆனாலும் ஆசை யாரை விட்டது. இலவசம் என்று சொல்லியே நிறுவனத்தை வளர்த்த ஜியோ நிறுவனம் இனி நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்போவதாக அறிவித்து உள்ளது.


இப்போதும் ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசம்தான். மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே 6 பைசா ஒரு நிமிடத்திற்கு வசூலிக்கப்பட உள்ளது.. இதுவரை ஜியோ நிறுவனத்தில் இருந்து மற்ற ஆப்பரேட்டர்களுடன் பேசுவதற்கான கட்டணமான 6 பைசாவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

ஆனால், டிராயின் விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்க முடிவு செய்துள்ளது. அதே நேரம், இந்த கட்டணம் தற்காலிகமானது என்றும், அரசாங்கம் இந்த கட்டணத்தை தள்ளுபடி செய்யும் வரை தொடரும் என்றும் ஜியோ அறிவித்துள்ளது. ஆனால், இனி அரசு இதில் தலையிடாது என்பதுதான் உண்மை.

சாதாரணமாக ஒரு வாடிக்கையாளருக்கு 10 ரூபாய்க்கும் குறைவாகவே செலவு ஆகும் என்று ஜியோ அறிவித்துள்ளது. அதே நேரம், இந்தக் கட்டணத்தை ஈடு செய்வதற்காக அதற்கு இணையான டேட்டாவை ஜியோ வழங்குகிறது. ப்ரீ பெய்ட் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாமல் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் இந்த கட்டண முறை பொருந்தும் என்கிறது ஜியோ நிறுவனம்.

இது ஒரு சாதாரண ஆரம்பம்தான். இனிமேல்தான் மெயின் ஃபிக்சரே வரப்போகுது என்கிறார்கள். உஷார் மக்களே...0