டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மர்மம்? - அதிர்ச்சி தெரிவிக்கும் அர்விந்த் கெஜ்ரிவால்

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேச சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடாமல் வைத்து வருகிறது.


பொதுவாக, வாக்குப்பதிவு அன்று மாலையில் பதிவின் அளவு வெளியிடப்பட்டுவரும் நிலையில், இயந்திர வாக்குப்பதிவு கடைப்பிடிக்கப்பட்ட இந்தத் தேர்தலில் இன்னும் ஏன் அது அறிவிக்கப்படவில்லை என பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர். 

இன்று மதியம்வரை தேர்தல் ஆணைய அதிகாரிகள், பதிவு அளவை வெளியிடவில்லை. செய்தியாளர்கள் இது குறித்துக் கேட்டதற்கு, அவர்கள், விவரங்கள் மறுசீராக்கம் செய்யப்படுகின்றன. இன்று மாலையில் வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும்” என்று கூறினர்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பிற்பகல் 3.40 மணியளவில், “ தேர்தல் ஆணையம் என்ன செய்துகொண்டிருக்கிறது. வாக்குப்பதிவு முடிவடைந்து எத்தனையோ மணி நேரம் ஆகியும் ஏன் இன்னும் வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்படவில்லை. அதிர்ச்சியளிக்கிறது” என்று தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.