இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிராம்மி விருதுவிழாவில் கலந்துகொண்டு அதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டூள்ளார்
பர்தாவுடன் முதல் மகள்! பர்தா இல்லாமால் 2வது மகள்! ரஹ்மானை விடாது துரத்தும் சர்ச்சை!

61-வது ஆண்டு கிராம்மி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டாப்பிள்ஸ் சென் டரில் கோலாகலமாகக் களைகட்டியது. 15 கிராம்மி விருதுகளை வென்ற அலீசியா கீஸ் விழாவை பொறுப்பேற்று நடத்தினார். பல புகழ்பெற்ற பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டார்.
இந்த 52 வயது இசைப் புயல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிராம்மி விருது விழாவின் சில தருணங்களை புகைப்படக் கண்ணால் சிறைப்பிடித்து வெளியிட்டார். இந்த விழாவில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் கண்ணைக் கவரும் கருப்பு வண்ண கோட் சூட்டில் காட்சியளிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் ரஹிமாவின் புகைப்படங்களையும் மறக்காமல் வெளியிட்டுள்ளார். ரஹிமாவும் கவரும் வகையிலான கருப்பு வண்ண ஆடையில் கலக்கலாக இருக்கிறார்.
சக கலைஞர்களுடன் தானும் தனது மகள் ரஹிமாவும் இருக்கும் புகைப்படம், அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சி, மகள் ரஹிமா கிராமஃபோன் பின்னணியில் நிற்கும் ஒரு புகைப்படம் உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில்வெளியிட்டுள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.
இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்திரி,ஃபல்குனி ஷா, சத்னம் கவுர் ஆகியோர் தங்கள் ஆல்பங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த 2010-ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக சிறந்த ஆல்பம் மற்றும் ஒளிப்படத்துறைக்கா சிறந்த பாடல் எழுதியது ஆகிய பிரிவுகளில் 2 கிராம்மி விருதுகளை வென்றார்.
முன்னதாக மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா கலந்து கொண்டார். அப்போது அவர் தலை முதல் கால் வரை மறைத்து புர்கா அணிந்திருந்தார்.
இந்த நிலையில் கிராமி விழாவில் கலந்து கொண்ட ரஹ்மானின்
2வது மகள் ரஹிமா வழக்கமான பெண்களை போல் உடை அணிந்துள்ளார். இந்த இரண்டு
புகைப்படங்களையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் சர்ச்சையாக்கப்பட்டு வருகிறது.