அடேங்கப்பா எடப்பாடியாரின் செயல்களில், புயல்களை தோற்கடிக்கும் வேகம்… பாராட்டு குவிகிறது.

முதல்வர் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு புயல்களை மிகச்சிறப்பாக சமாளித்து வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பிரதமர் மோடியே, எடப்பாடியை தொலைபேசியில் அழைத்து பாராட்டியிருப்பது, அவரது ஆட்சித் திறனுக்கு மிகச் சிறந்த சான்றாக அமைந்துள்ளது.


தமிழகத்தை கடந்த நவம்பர் மாதம் நிவர் புயல் தாக்கியது. மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும், மிக பலத்த பாதிப்புகள் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. புயல் பற்றிய செய்தியறிந்ததும் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி மீட்பு நடவடிக்கைகள் பற்றி எடப்பாடி ஆலோசனை நடத்தினார். உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை தொடர்புகொண்டு நிவாரணப் பணிகள் தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துவிட்டு கோட்டையில் அமராமல் கொட்டும் மழையிலும் நேரடியாகவே களமிறங்கினார். நிரம்பி வழிந்த செம்பரம்பாக்கம் ஏரி தொடங்கி கடலூர் வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார்.

முதல்வர் எடப்பாடியின் உத்தரவுக்கேற்ப தமிழகமெங்கிலும் மின்னல் வேகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. தமிழக அரசின் இத்தகைய புயல்வேக செயல்பாடுகளால் நிவர் புயலினால் மிகக் குறைந்த அளவிற்கே சேதங்கள் ஏற்பட்டன.

இப்போது புரெவி புயல் மிரட்டிக் கொண்டிருக்கிறது. இந்த புயலையும் எதிர்கொள்ள தமிழக அரசு போர்க்கால வேகத்தில் தயாராகி வருகிறது. புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்வரும் அவ்வப்போது மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, நிலைமைகளைக் கேட்டறிந்து வருகிறார்.

சாதாரண நிலையிலிருந்து முதல்வர் பதவிக்கு உயர்ந்திருப்பதால் சாமானியர்களின் கஷ்டம் அவருக்கு மிக நன்றாகத் தெரிகிறது. இயற்கை சீற்றங்களால் மக்களுக்கு ஆகக் கூடிய வரையில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். இந்த அடிப்படையிலேயே எடப்பாடியின் புயல்நேர செயல்பாடுகளும் அமைந்துள்ளன என்று மக்கள் பாராட்டி வருகின்றனர்.